Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆச்சார்யா வினோபா பாவே-ன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை


ஆச்சார்யா வினோபா பாவே-ன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.  இந்தியாவின் ஆன்மிகம், சமூகம் மற்றும் அரசியலுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் குறித்து அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆச்சார்யா வினோபா பாவே-ன் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் மிகவும் போற்றத்தக்க ஆன்மிக தலைவர்களில் ஒருவராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சமூதாய சீர்திருத்தவாதியாகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கது. காந்திய சிந்தனைகளை பிரபலப்படுத்துவதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்டவர்.  அவரது சிந்தனைகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கு பெரிதும் உதவிடும்.”

***

(Release ID: 2165503)

AD/SV/AG/KR