பி.எம்.இந்தியா
ஆச்சார்ய வினோபா பாவே -வின் பிறந்ததினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
ஆச்சார்ய வினோபா பாவே –வின் ஜெய் ஜெகத் என்ற எழுச்சியூட்டும் முழக்கம் எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்தியதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பல்வேறு முயற்சிகள் மூலம் அனைவரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக ஆச்சார்ய வினோபா பாவே அரும்பணி ஆற்றியதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமத்துவம், கண்ணியம், சேவை ஆகியவற்றின் மீதான அவரது உறுதியான நம்பிக்கை விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு வலிமையளித்ததாக அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆச்சார்ய வினோபா பாவே –வின் பிறந்ததினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
அவரது ‘ஜெய் ஜெகத்’ எழுச்சியூட்டும் முழக்கம் எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்தியது. பல்வேறு முயற்சிகள் மூலம் அனைவரது நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அவர் அரும்பணி ஆற்றினார்.
சமத்துவம், கண்ணியம், சேவை ஆகியவற்றின் மீதான அவரது உறுதியான நம்பிக்கை விளிம்பு நிலை மக்களுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது.
***
(Release ID: 2309117)
TV/SV/SM/SH
Tributes to Acharya Vinoba Bhave on his Jayanti.
— Narendra Modi (@narendramodi) September 11, 2026
His stirring call of ‘Jai Jagat’ transcended every boundary and placed humanity above all.
Through his various efforts, he worked towards the welfare and empowerment of all.
His unwavering faith in equality, dignity and…