Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

“ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகவும் மன வேதனையடைந்தேன். தங்களது நெருங்கிய சொந்தங்கள் மற்றும் அன்பான குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பங்களுடன் எனது சிந்தனைகள் உள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசியப்  பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும்,  காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”

***

(Release ID: 2185120)

AD/SV/RJ