Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்; நிலநடுக்கத்தில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு பிரதமர் அனுதாபம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. முகமது அஷ்ரப் கனியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார். நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு பிரதமர் தனது அனுதாபங்களை தெரிவித்தார்.

“தற்போதுதான் அதிபர் அஷ்ரப் கனியிடம் பேசினேன். நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு எனது இரங்கல்களை தெரிவித்தேன்

நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த முதல்நிலை மதிப்பீடு குறித்து அதிபர் அஷரப் கனி என்னிடம் கூறினார். இயன்றவரையிலான அனைத்து உதவிகளையும் அளிக்க உறுதியளித்தேன்.

நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து குழந்தைகள் உயிர் இழந்ததாக அதிபர் அஷரப் கனி கூறினார். இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

அதிபர் அஷ்ரப் கனி பள்ளி சம்பவத்தை கூறும்போது 2001-ல் கட்ச்சின் அஞ்சார் பகுதியில் ஏற்பட்ட இதே போன்ற சம்பவம் என் நினைவிற்கு வந்தது. மிகவும் சோகத்தை அளிக்கிறது”, என்று பிரதமர் கூறியுள்ளார்

•••••