பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆஷாதி ஏகாதசி புனித தினத்தையொட்டி, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பக்தி, பரிவு போன்ற காலத்தால் அழியாத செய்தியை இந்த மங்களகரமான தினம் உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகவான் விட்டலின் அருளாசி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், வளத்தை கொண்டுவரவும், அனைவரையும் ஒரு சிறந்த சமூகத்தை நோக்கி வழிநடத்தவும் வேண்டும் என்று திரு நரேந்திர மோடி பிரார்த்தித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு தனிமனிதனின் நலன், கண்ணியத்திற்காக அயராது உழைக்கவும், சேவையாற்றவும் கூடிய மனஉறுதியை அவர் வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“ஆஷாதி ஏகாதசி புனித தினத்தையொட்டி எனது வாழ்த்துகள். பக்தி, பரிவு கருணை ஆகியவற்றின் காலத்தால் அழியாத செய்தியை, இந்த மங்களகரமான தினம் உணர்த்துகிறது. பகவான் விட்டலின் அருளாசி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், வளமையைக் கொண்டுவரவும், நம் அனைவரையும் ஒரு சிறந்த சமூகத்தை நோக்கி வழிநடத்தவும் வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் நலன், கண்ணியத்திற்காக அயராது உழைக்கவும், சேவையாற்றவும் கூடிய மன உறுதியை வலுப்படுத்த வேண்டும்.”
****
(Release ID: 2289275)
TV/SV/RJ
Greetings on the sacred occasion of Ashadhi Ekadashi. This auspicious day is about the eternal message of devotion and compassion. May Bhagwan Vitthal’s blessings bring joy, harmony and prosperity and guide us towards a better society. May He strengthen our resolve to serve and…
— Narendra Modi (@narendramodi) July 25, 2026
आषाढी एकादशीच्या पवित्र पर्वानिमित्त हार्दिक शुभेच्छा. हा मंगलमय दिवस भक्ती, करुणा आणि सामाजिक सलोख्याचा चिरंतन संदेश देणारा आहे. भगवान विठ्ठलाचे आशीर्वाद आपल्या सर्वांच्या आयुष्यात आनंद, सलोखा आणि समृद्धी घेऊन येवो, हीच कामना. समाजातील प्रत्येक व्यक्तीच्या कल्याणासाठी आणि…
— Narendra Modi (@narendramodi) July 25, 2026