பி.எம்.இந்தியா
இத்தாலியில் போருக்குப் பிந்தைய வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றதற்காக, இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.09.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனை, அவரது தலைமைத்துவத்தின் மீது இத்தாலி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார். மேலும், இந்தியா-இத்தாலி சிறப்பு உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவரது நட்பு முக்கியப் பங்காற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாட்டு மக்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்க, நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வருங்காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றிபெற தமது நல்வாழ்த்துகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இத்தாலியில் போருக்குப் பிந்தைய வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற எனது நண்பர் பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சாதனை, அவரது தலைமையின் மீது இத்தாலி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.
இந்தியா-இத்தாலி சிறப்பு உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவரது நட்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. நமது நாட்டு மக்களுக்கு ஒரு வளமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்காக, நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர ஆவலுடன் உள்ளேன்.
வருங்காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற என் நல்வாழ்த்துகள்.”
—
(Release ID : 2306668)
SS/PLM/SH
Congratulations to my friend Prime Minister Meloni on becoming the longest continuously serving Prime Minister in Italy's postwar history. This milestone is a reflection of the trust and confidence of the Italian people in her leadership.
— Narendra Modi (@narendramodi) September 4, 2026
Her friendship has also been…
Mi congratulo con la mia amica, il Primo Ministro Meloni, per essere diventata il Primo Ministro con il mandato più lungo nella storia del dopoguerra italiano. Questo traguardo riflette la fiducia che il popolo italiano ripone nella sua leadership.
— Narendra Modi (@narendramodi) September 4, 2026
La sua amicizia è stata…