Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் உள்ள விசா நடைமுறையை பரவலாகவும், எளியமையாகவும் மற்றும் பொருத்தமாகவும் அமைத்திட அமைச்சரவை ஒப்புதல்


பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள விசா வழங்கும் முறையை பொருத்தமாகவும், பரவலாகவும், எளிமையாகவும் அமைப்பதற்கும் மற்றும் உள்விவாகார அமைச்சகம் பல்வேறு பங்கேற்பாளர்களுடன் ஆலோசனை செய்து உள்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் அவ்வப்போது விசா கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கும் தனது ஒப்புதலை வழங்கியது.

வெளிநாட்டினர் சுற்றுலா, வாணிபம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வருவதற்கு இந்த ஒப்புதல் வழிவகுக்கும். இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், சுற்றுலா, மருத்துவ மதிப்பு பயணம் மற்றும் வாணிபம் தொடர்பான பயணம் போன்ற சேவைகள் மூலம் வருவாயை உயர்த்தவும், ‘திறன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’, ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ உள்ளிட்ட அரசின் முக்கிய முனைப்புகளை வெற்றியடையவும் செய்யும்.

இது மேற்கூறிய நியாயமான காரணங்களுக்காக வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வருவதை எளிதாக்கும்.

*****