Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் ஐ.எம்.எப். நிறுவனத்தின் சார்பில் தெற்காசிய மண்டல பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி மையம் அமைப்பதற்காக, ஐ.எம்.எப். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, சர்வதேச நிதி ஆணையத்தின்(ஐ.எம்.எப்.) சார்பில் தெற்காசிய மண்டல பயிற்சி மற்றும் தொழில் நுட்ப உதவி மையம் தொடங்க, ஐ.எம்.எப்-போடு புரிந்துணர்வு கையெழுத்திட ஒப்புதல் அளித்தது. இந்த பயிற்சி மையம் அமைப்பது தொடர்பான நிதி ஆதாரங்கள் வழங்குதல், இடம் தெரிவு செய்தல், நிர்வாகக் குழுவில் இந்தியாவின் பிரதிநிதிகளை முடிவு செய்தல், ஆகியவை தொடர்பாக முடிவெடுக்க, நிதி அமைச்சருக்கு அதிகாரம அளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த பயிற்சி மையம், ஐ.எம்.எப். மற்றும் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய உறுப்பு நாடுகளின் கூட்டுறவோடு செயல்படுத்தப்படும். இந்த பயிற்சி மையத்தில் இதர நாடுகள் பின்னர் சேரலாம். இந்தியாவிலும் மாநிலங்கள் இதில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

“ஆசியாவின் முன்னேற்றம் : எதிர்காலத்தில் முதலீடு” என்ற தலைப்பில், புதுதில்லியில் ஐ.எம்.எப். மண்டல மாநாடு நடத்த உள்ளது. அந்த மாநாட்டின்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

மாநிலங்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு ஐ.எம்.எப்.பின் நிதி, நிதிக் கொள்கை, மற்றும் தெற்காசியாவின் ஆறு உறுப்பு நாடுகளோடு ஒத்துழைப்பு என்பது போன்ற விஷயங்களில் திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும்.

மத்திய மற்றும் மாநில அளவில் திறன் வளர்ச்சி, வருவாய் சேகரிப்புக்கும், கொள்கை வடிவமைப்புக்கும், பொது நிதி நிர்வாகத்துக்கும் பெரிதும் உதவும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

ஐ.எம்.எப். மூலமாக வரும் திறன் வளர்ச்சி, உலகெங்கும் உள்ள சிறந்த நிதி நடவடிக்கைகள், ஆகியவற்றை இந்தியாவுக்கு வருவதற்கு உதவும். நிதி தொடர்பான விவகாரங்களுக்கு நல்ல முடிவுகளைக் காணவும், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் இது உதவும்.