Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் மக்கள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்தின் “லண்டனுக்கான போக்குவரத்து” என்ற சட்டமுறை ஆணையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, இந்தியாவில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும்   இங்கிலாந்தின் பெருநகர லண்டன் அதிகார சட்டம் 1999ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட சட்டமுறை ஆணையமான “லண்டனுக்கான போக்குவரத்து” ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவும், செயல்படுத்திடவும் ஒப்புதல் வழங்கியது.

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், பயணிகளின் சேவைகளை மேம்படுத்தவும் மற்றும் இந்தியாவில் உயர் திறன்மிக்க பேருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை உதவும். மேலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்பெறச் செய்யவும், ஊக்கப்படுத்தவும் பெருமளவில் இது உதவும்.

அனைவருக்குமான ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்திட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை உதவும். சமுதாயத்தின் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், தரமான பொது போக்குவரத்தை அமைப்பை அணுகுவதற்கும் இது உதவும்.

*****