Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் புரிந்துணர்வு  ஒப்பந்தத்துக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆஸ்திரேலிய விமானப் பாதுகாப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. இதனால் இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பில்  ஒட்டு மொத்த மேம்பாடு ஏற்படும்.

சர்வதேச விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கான வழிவகைகளை இந்த ஒப்பந்தம் வழங்கும். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புத் துறையில் மேம்பாட்டை உறுதி செய்யும்.

*****