Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவுக்கும் கிரீஸ் நாட்டிற்க்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்தி மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

இரு நாடுகளுக்கும் இடையே அதிகமான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பண்பாட்டுப் பரிவர்த்தனை ஆகியவற்றை அதிகரிக்கும் திறன் இந்த ஒப்பந்தத்திற்கு உள்ளது. மேலும் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டு மேம்பாடுகளுக்கு ஏற்றவாறு இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இரு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புக்கைளை வழங்கும் அதே சமயம் கூடுதலான தடையற்ற விமான போக்குவரத்து இணைப்புக்கு உகந்த சூழ்நிலையை இது அமைத்து தரும். விமானப் போக்குவரத்தில் கூடுதல் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இது வழி வகை செய்யும்.

 

இந்த விமானச் சேவைகள் உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு

  1. இரண்டு நாடுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விமான நிறுவனங்களை இந்த சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

  1. நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் விமான சேவைகளை மேம்படுத்தவும் விற்பனை செய்யவும் இந்த நாடுகளின் பகுதிகளில் அலுவலகங்களை அமைத்து செயல்பட உரிமை பெறும்.
  2. நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட விமானப் பாதைகளில் நியாயமான சம வாய்ப்பு அடிப்படையில் ஒப்புக் கொண்ட சேவைகளை நடத்துவதற்கு உரிமை பெறும்.
  3. ஒப்பந்தம் செய்து கொண்ட தரப்புகளின் நியமிக்கப்பட்ட விமான நிறுவனம் அதே தரப்பைச் சார்ந்த அல்லது அடுத்த தரப்பைச் சார்ந்த நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மற்றும் விற்பனை ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். மூன்றாவது நாடுகளிலும் இத்தகைய ஏற்பாடுகளை அவை செய்து கொள்ளலாம்.
  4. வழித்தடங்கள் பட்டியலின் படி இந்திய விமான நிறுவனங்கள் ஏதென்ஸ், தெசாலோனிகி, ஹிராகிலியான் மற்றும் பின்னர் குறிப்பிடப்படும் மூன்று இடங்கள் ஆகியவற்றுக்கு இந்தியாவிலிருந்து விமான சேவைகளை நடத்தலாம். அதே போல ஹெல்லெனிக்  குடியரசான கிரீசிலிருந்து இந்தியாவின் புதுதில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு நேரடி விமானப் போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்திக் கொள்ளலாம். வழித்தடங்களின் இடையில் எந்த இடமும், சென்றடையும் இடத்துக்கு அப்பால் உள்ள எந்த இடமும் இந்தியா மற்றும் கிரீஸ் நாடுகளின் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்களின் சேவையின் கீழ் கொண்டுவரப்படலாம்.

 

தற்போதைய நிலையில் இந்தியாவுக்கும் கிரீசுக்கும் இடையே எவ்வித விமான சேவை ஒப்பந்தமும் இல்லை. இரு நாடுகளின் குழுக்களும் புதுதில்லியில் 2016 செப்டம்பர் 6,7 தேதிகளில் சந்தித்து விமான சேவைகள் ஒப்பந்தத்துக்கான வாசகங்களை இறுதி செய்தன. இந்த ஒப்பந்தம் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ள அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அதே சமயம் சிவில் விமானப் போக்குவரத்து துறையிள் நவீன மேம்பாடுகளையும் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே விமானப் போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது இந்த ஒப்பந்தம்.

 

*****