பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும், சமோவா நாட்டிற்கும் இடையே வரிகள் தொடர்பான தகவல் பரிமாற்றத்திற்கு வகை செய்யும் ஒப்பந்த கையெழுத்திடலுக்கும் ஒப்புதலுக்குமான உடன்பாட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த உடன்பாட்டின்படி இந்தியாவுக்கும், சமோமாவுக்கும் இடையே வரிகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் விரைவுப்படுத்தப்படுவதுடன் வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப்படும்.
தற்போதைக்கு இதனால் எந்த நிதிச்சுமையும் இல்லை. செலவினம் அமெரிக்க டாலர் 500க்கும் அதிகமாகும் அபூர்வமான நிகழ்வுகளில் அந்தச் செலவினத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளும். இதேபோன்ற வரித் தகவல், பரிவர்த்தனை ஒப்பந்தங்களில் இதற்கான வழிவகைகள் உள்ளன.
உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள்
1. இந்த உடன்பாட்டுக்கு உட்பட்ட வரித் தொடர்பான இருநாடுகளின் சட்டங்களை நிர்வகிக்கவும், அமல்படுத்தவும் உரிய தகவல்களை பரிவர்த்தனை செய்து கொள்வதன் மூலம் இந்தியா, சமோவா நாடுகளின் அதிகாரம் பெற்ற அமைப்புகளுக்கு உதவி கிடைக்கும்.
2. இந்த உடன்பாட்டின்படி பெறப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்தத் தகவல்கள் உரிய அதிகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். (நீதிமன்றங்கள் அல்லது நிர்வாக அமைப்புக்கள்) மதிப்பீடு செய்தல், தகவல் சேகரித்தல், அமலாக்கம், வழக்கு நடைமுறை, மேல்முறையீடுகளை கையாளுவது போன்றவை தொடர்பான உரிய அதிகாரம் பெற்றவர்களுக்கு இது வழங்கப்படும். தகவல் அனுப்பும் நாட்டின் ஒப்புதலுடன் இந்தத் தகவல்கள் இதர நபர்கள், அமைப்புகள், ஆணையம் ஆகியோருக்கும் வழங்கப்படும்.
3.பரஸ்பர உடன்பாட்டு நடைமுறைகளுக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைவது நடைமுறைகளுக்கு ஏற்பளிப்பது போன்ற இந்த உடன்பாடு வகை செய்கிறது.
4. இந்த உடன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான இருநாடுகளின் சட்ட நடைமுறைகள் நிறைவடைந்து அறிவிக்கையாக வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
பின்னணி
1961 வருமானவரி சட்டத்தின்படி வரிஏய்ப்பு அல்லது வரி தவிர்ப்பு ஆகியவற்றை தடுப்பதற்கு உரிய தகவல் பரிமாற்றத்தை வெளிநாடு ஒன்றுடனோ அல்லது குறிப்பிட்ட பகுதியுடனோ செய்து கொள்வதற்கு அந்தச் சட்டத்தின் 90வது பிரிவு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தியாவுக்கும், சமோவாவுக்கும் இடையே 2016 ஜூன் மாதம் வரி தொடர்பான தகவல் பரிமாற்ற உடன்பாடு தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றன. இதனையடுத்து இந்த ஒப்பந்தத்தின் வாசகங்களுக்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்தன.