பி.எம்.இந்தியா
பிரதமரின் தொடக்க அறிக்கை
உங்கள் அனைவருக்கும் மனமுவந்த வரவேற்பு அளிக்கிறேன். உங்களில் சிலருக்கு இந்தியாவில் முன்பே பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கும். சிலர் இந்தியாவிற்கு முதல் முறையாக இப்போது தான் பயணம் மேற்கொண்டிருப்பீர்கள். இங்கு உங்களுக்கு வசதிகள் நன்கு கிடைத்திருக்கும் என்றும் உங்களது தேவைகளும் நன்கு கவனிக்கப்பட்டு இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். நீங்கள் அரசு முறையிலான நிகழ்ச்சிகளுக்காக வருகைப் புரிந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். அந்த நிகழ்ச்சிகளோடு வேறு ஏதாவது நிகழ்ச்சிகள் குறித்து நீங்கள் ஆலோசனை கூறினால் அவற்றையும் நிறைவேற்ற இயலும். இந்தியா-ஆப்பிரிக்கா அமைப்பின் உச்சி மாநாட்டுக்காக நீங்கள் இங்கு பயணம் மேற்கொண்டுள்ளீர்கள் என்பதற்காக மட்டும் அதை முக்கியமானதாக நான் கருதவில்லை. உங்களது வருகை மிக முக்கியமானதாக உள்ளது. அதற்காக எனது அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
இந்தியா-ஆப்பிரிக்கா அமைப்பின் உச்சி மாநாடு பல விதங்களில் முக்கியமானதாக நான் கருதுகிறேன். இத்த உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதால் இந்தியாவும் மிக முக்கியமானதாகிறது. இந்த உச்சி மாநாட்டில் முதல் முறையாக ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவை அனைத்தும் கலந்து கொள்கின்றன. அகவே இந்தியா-ஆப்பிரிக்கா அமைப்பின் உச்சிமாநாடு மிகப் பெரிய நிகழ்வாக இருக்கும்.
தற்போதுவரை கிடைத்த தகவலின்படி, 40 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். மற்ற நாடுகளில் இருந்து மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த முறை இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா கூட்டமைப்பின் உச்சி மாநாட்டுடன் இணைந்து வர்த்தக அமைச்சர்களின் மாநாடு ஒன்றும் நடைபெற உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே பொருளாதார உறவுகளை இதன் மூலம் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இதற்கு முன்பு இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டமைப்பின் உச்சி மாநாடுகள் 2008 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது. தற்போது 3வது இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு முன்பு நடத்த இரண்டு உச்சி மாநாடுகளும் பஞ்ஜூல் திட்டத்தின்படி நடைபெற்றது. ஆதலால் சில நாடுகளே அதில் பங்கேற்றன. ஆனால், இந்த முறை இந்தத் திட்டத்தில் இருந்து நாங்கள் விலகி ஆப்பிரிக்காவின் அனைந்து நாடுகளும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
இந்த உச்சி மாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிடையே நட்புறவு புதிய உச்சத்தை எட்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த நட்புறவு அனைத்து நாடுகளும் சமமான அளவில் மதிக்கப்பட வேண்டும் என்பதையே குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். எங்களது இந்த முயற்சியின் மூலம் மற்ற இரண்டு உச்சி மாநாடுகளை காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன். உயர் மட்டத்தில் பல்வேறு நிலைகளில் பல சந்திப்புகள் நடைபெற உள்ளன. இந்த நட்புறவின் மூலம் ஆப்பிரிக்காவின் மூலை முடுக்குகளில் எல்லாம் புதிய உத்வேகம் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். ஆப்பிரிக்காவில் மட்டும் இதுபோன்ற புதிய உத்வேகம் மட்டுமல்லாது இந்தியாவிலும் இந்த உச்சி மாநாட்டின் மூலம் புதிய உத்வேகம் ஏற்படும். இதனால் நம்மிடையே உறவுகளிலும் புதிய புத்துணர்ச்சி காணப்படும்.
நீங்கள் இந்தியாவில் ஒரு வார காலத்திற்கு இந்தியாவின் பல பகுதிகளை பார்க்கும் திட்டம் உள்ளதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் நீங்கள் காண்பீர்கள். இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு தெரியப்படுத்த ஆப்பிரிக்காவிலிருந்து 400 பத்திரிக்கையாளர்கள் அவர்களே செலவு செய்து வருகிறார்கள். இதன் மூலம் இந்த உச்சிமாநாட்டின் முக்கியத்துவம் நன்கு விளங்கும் என்று நான் நினைக்கிறேன். நான் உங்களுடன் உரையாடும்போது உலகம் முழுவதும் இந்த உச்சிமாநாட்டிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதை அறிந்தேன். உலக நாடுகளும், மக்களும் இந்த உச்சி மாநாட்டிற்கு அளித்துள்ளது என்பது நல்ல அடையாளமாகும்.
இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவுகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மட்டுல்ல, கலாச்சார ரீதியாகவும் சிறந்து விளங்கி வருகின்றன. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் புவியில் தற்போதுள்ள இரண்டு பாகங்கள் ஒன்றாகவே இருந்தன என்றும் பின்னர் இரண்டு பாகங்களாக பிரிந்து ஒரு பகுதி ஆசியா ஆகவும், இன்னொரு பகுதி ஆப்பிரிக்காவாகவும் இருந்தன என்று கூறப்படுகிறது. இவற்றை பிரிக்கும் வகையில் கடல் பகுதி உள்ளது. இந்தியாவில் மேற்கு கடற்கரையும், ஆப்பிரிக்காவில் கிழக்கு கடற்கரையும் கடலால் இணைக்கப்பட்டுள்ளன.
நான் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். முற்காலத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆப்பிரிக்காவுடன் தொடர்பு கொண்டு கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இன்றும் 270000 இந்தியர்கள் ஆப்பிரிக்காவில் உள்ளனர். அவர்களில் பலர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நான் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது மட்டுமல்லாமல், அதற்கு முன்னரும் ஆப்பிரிக்காவுடன் தொடர்பு கொண்டுள்ளேன். ஆப்பிரிக்காவிலிருந்து என்னைக் காண வரும் விருந்தினர்கள் என்னை சந்திப்பதுண்டு. இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்துடன் எனக்கு தொடர்பு இருந்தது. ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு பிரமுகர்களுடனும் எனக்கு நல்ல நட்புறவு இருந்தது. ஆகவே, தனிப்பட்ட முறையில் அந்த பகுதிகளுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. உலகில் உள்ள மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை இந்தியாவின் மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது. உலகில் ஆப்பிரிக்கா கண்டம் அதிக இளைஞர்களைக் கொண்ட பகுதியாக உள்ளது. அதேபோல் இந்தியாவிலும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். உலக நாடுகளை ஒப்பிட்டு பார்த்தால் இந்த இரண்டு இடங்களிலும்தான் 35 வயதுக்குக் குறைந்த இளைஞர்கள் 65 சதவீதம் வரை உள்ளனர். ஆகவே ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இது சிறந்த வாய்ப்பாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே உள்ள வர்த்தகம் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் எட்டு முதல் ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர் மேலும் இது அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். ஆப்பிரிக்காவில் இன்று இந்தியா பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய்ப் பிரிவில் இந்தியாவின் முதலீடு அதிக அளவில் உள்ளதால் ஆப்பிரிக்கா பொருளாதாரத்தில் புதிய உத்வேகம் காணப்படுகிறது.
இந்தியா-ஆப்பிரிக்கா அமைப்பின் இரண்டு உச்சி மாநாடுகள் நடைபெற்ற பின்னர், 7.4 பில்லியன் டாலர் அளவிற்கு சலுகை அடிப்படையில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டமைப்பு வசதிகள், விவசாயம், தொழில்துறை, மின்சக்தி மற்றும் தண்ணீர் ஆகிய பிரிவுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் 40க்கு மேல் உள்ள நாடுகளில் 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், இந்தியா 1.2 பில்லியன் டாலர் அளவிற்கு 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் மனித ஆற்றல் மேம்பாடு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே மனித ஆற்றல் மேம்பாடு குறித்த உறவுகள் எனக்கு மிகுந்த மகிழ்க்கியை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மாணவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆப்பிரிக்காவில் இன்று உள்ள தலைவர்கள் மற்றும் உயர் பதவியில் உள்ள பலர் இந்தியாவில் கல்வியும், பயிற்சியும் பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே மேலும் ஒரு வகையில் தொடர்பு உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் சூரியஒளி மின்சக்தியை அளிக்கும் திட்டத்தின் மூலம் ஆப்பிரிக்க நாடுகள் பல பயனடைந்து உள்ளன. இந்த நாடுகள் வரும் ஆண்டுகளில் வலுவான நாடுகளாக உருவாகும் என்று நான் நினைக்கிறேன். முக்கியமாக தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்த பிரச்சினையை சமாளிக்கவும் போராடவும் முக்கிய பங்கை நாம் ஆற்ற இருக்கிறோம். இதன் மூலம் தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்து ஏற்படும் விளைவுகளை குறைக்க இயலும்.
இன்று இந்தியாவும் ஆப்பிரிக்காவும் வேறொரு விஷயத்தில் ஒன்றுபட்டு இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன். குறிப்பாக தட்பவெட்ப நிலை குறித்த பிரச்சினையினால், உலகம் வெப்பமயமாதல் குறித்து கவலை கொண்டுள்ளன. சுற்றுச்சூழலை எவ்விதத்திலும் மாசுபடாமல் இருப்பதற்கான நடைமுறைகளை பின்பற்றுவதில் கலாச்சார மற்றும் பாரம்பரிய முறையில் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டுள்ளன. உலகில் காணப்படும் இப்பெரிய பிரச்சினையில் நாம் மிகக் குறைந்த அளவே பங்கேற்று உள்ளோம். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே இது பொதுவான காரணியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
உச்சி மாநாட்டின்போதும் அதற்கு பின்பும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். அதன் மூலம் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் புதிய அளவில் தன்னம்பிக்கையை பெறும் என்றும் நினைக்கிறேன். நமது நட்புறவு மேலும் ஆழமாகவும், நெருக்கமாகவும் இருக்கும். அதன் மூலம் நாம் இணைந்து உலகிற்கு புதிய அடித்தளங்களை அமைக்க முடியும் என்று நான் எண்ணுகிறேன்.
மீண்டும் உங்களை வரவேற்கிறேன். உச்சி மாநாடு நடைபெறும்போது மீண்டும் உங்களை வாழ்த்த எனக்கு வாய்ப்பு கிடைக்கும். நன்றி.
Exchanged views on India-Africa relations with African journalists attending 3rd India Africa Editors Forum. pic.twitter.com/4KJoIYAuEW
— Narendra Modi (@narendramodi) October 23, 2015
Am told over 400 media persons from Africa are coming for @indiafrica2015. This indicates the vitality of the Summit & optimism towards it.
— Narendra Modi (@narendramodi) October 23, 2015
Am hopeful on achieving stronger economic ties between India & Africa. Also hopeful for deeper cooperation in energy, HRD & other areas.
— Narendra Modi (@narendramodi) October 23, 2015