Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-குரோஷியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா-குரோஷியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்தியா குரோஷியா நாடுகளுக்கிடையே வணிகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஒப்பந்தம் ஏற்கனவே செப்டம்பர் 1994ல் கையெழுத்தானது. இருநாடுகளுக்கிடையேயான வணிகத்தையும், பொருளாதார உறவுகளையும் மேம்படுத்தும் நோக்கில் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் நவம்பர் 2009ல் காலாவதியானது. இருநாட்டு நல்லுறவை தொடரும் விதத்தில் இந்தியா-குரோஷியா இடையே இந்த புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்தியா குரோஷியா நாடுகளுக்கிடையேயான மொத்த வணிகம் 2012-13ஆம் ஆண்டு 152.01 மில்லியன் டாலர்களும், 2013-14அம் ஆண்டு 148.86 மில்லியன் டாலர்களும், 2014-15ஆம் ஆண்டு 205.04 மில்லியன் டாலர்களும் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இருநாடுகளுக்கிடையேயான வணிகம் 17.44% வளர்ச்சியடைந்துள்ளது.