Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா–ஜெர்மனி நாடுகளுக்கு இடையேயான ஆலோசனை கட்டமைப்பின் நான்காவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பெர்லின் வருகை

இந்தியா–ஜெர்மனி நாடுகளுக்கு இடையேயான ஆலோசனை கட்டமைப்பின் நான்காவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்கட்கிழமை அன்று பெர்லின் வருகை தந்தார். இது பிரதமர் மோடி ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அரசுமுறை பயணமாகும்.

பெர்லினுக்கு அருகே உள்ள ஷால்ஸ் மிஸ்பெர்க்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மேர்க்கெல் அலுவல் சாரா இரவு உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்து சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின்போது நவீன நகரங்கள், திறன் மேம்பாடு, தூய்மையான மின் ஆற்றல் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு துறைகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்திய அரசு மேற்கொண்டிருக்கு ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார புனரமைப்பு திட்டங்கள் பாராட்டப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு முக்கியத்துவத்தை பற்றியும் அது எவ்வாறு உலகத்தின் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பற்றியும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

ஆப்கானிஸ்தான் குறித்து பேசுகையில், ஆப்கானிஸ்தான் தலைமையிலான ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான நல்லிணக்க செயற்பாட்டின் முக்கியத்துவத்தினை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். தீவிரவாதம், தீவீரவாதத்தை ஒடுக்குதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சீனாவின் பட்டை ஒன்று பாதை ஒன்று பற்றியும் பருவநிலை மாற்றம் குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

ஷால்ஸ் மிஸ்பெர்க்கிற்கு வந்த பிரதமர் மோடி இந்த கூட்டத்திற்கு முன் அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

***