Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நவம்பர் 2015ல், இந்தியாவின் விமான நிலைய ஆணையம் மற்றும் சிங்கப்பூரின் சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே விமான போக்குவரத்து தொடர்பாக பிரதமரின் சிங்கப்பூர் விஜயத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், விமானப் போக்குவரத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது. இதன் முதல் கட்டமாக ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் இந்த ஒத்துழைப்பு நடைபெறும். இரு தரப்பு சம்மதத்தோடு மற்ற விமான நிலையங்களுக்கும் இந்த ஒத்துழைப்பு நீட்டிக்கப்படும்.

(1) விமான நிலைய வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் (2) போக்குவரத்து வளர்ச்சி (3) வணிக வளர்ச்சி (4) தரம் மேம்படுத்துதல், (5) பயிற்சி மற்றும் வளர்ச்சி (6) சரக்கு மேலாண்மை (7) பராமரிப்பு, சீர்படுத்துதல் (8) செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை (8) மற்றும் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் இதர துறைகள் ஆகியவற்றில், இரு தரப்பும் ஒத்துழைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

சிங்கப்பூர் அரசு, உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றை வைத்துள்ளது. இது பல ஆண்டுகளாக உலக விமான நிலையங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்த, விமான நிலையங்கள் ஆணையம், செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் புதிய ஒப்பந்தங்களில், விமான சேவை அல்லாத வருமானம் உட்பட (நிலம் தவிர்த்து) ஈடுபட வேண்டிய தேவை இருப்பதாக உணரப்பட்டது. நகரப் பகுதி மற்றும் காற்று பகுதியில் உள்ள நிலம், விமான நிலைய ஆணையத்தாலேயே பராமரிக்கப்படும்.

உலகெங்கும், செயல்பாடு மற்றும் மேலாண்மைக்கான ஒப்பந்தங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் செய்யப்படுகின்றன. இம்முடிவை செயல்படுத்துவதற்கு, அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் விமான நிலையங்களுக்கான செயல்பாடு மற்றும் மேலாண்மைக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட அனுபவம் வாய்ந்த நிறுவனத்தின் தேவை இருந்தது.

*****