Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் செஷல்ஸ் நாடுகளுக்கு இடையே கடல் ஆய்வு தொடர்பான வர்த்தகத்தில் கூட்டுறவு குறித்த நெறிமுறைகள்


இந்தியா மற்றும் செஷல்ஸ் நாடுகளுக்கு இடையே கடல் ஆய்வு தொடர்பான பொருளாதாரம் குறித்த கூட்டுறவு பற்றிய நெறிமுறைகளுக்கான ஒப்பந்தம் குடியரசுத் தலைவர் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி பயணம் மேற்கொண்டபோது கையெழுத்திடப்பட்டது. இதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடல் ஆய்வு குறித்து இருநாடுகளுக்கும் இடையே கூட்டுறவு செயல்படுத்தப்படுவது குறித்தும் கடல் அறிவியல் ஆய்வின் போது அறியப்படும் கடல் பொருள் வளங்களின் மூலம் நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்கு அவை பயன்படுவது குறித்தும் இந்த நெறிமுறைகள் விளக்கும் வகையில் உள்ளன.

கடல் ஆய்வு குறித்த பிரிவில் இந்தியா அளிக்கும் கூட்டுறவில் இது முக்கியமானதாக உள்ளது. இதன்மூலம் கடலில் கிடைக்கும் வளங்களை அறியவும். தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், வர்த்தக பயன்களை பெறவும், செஷல்ஸ் நாட்டுடன் இந்த கூட்டுறவு நமக்கு பயனளிக்கும். செஷல்ஸ் நாட்டுடன் கடல் ஆய்வு குறித்த கூட்டுறவு மூலம் கடலில் கிடைக்கும் வளங்கள் பற்றிய தகவல்கள் கண்டறியப்படும். தொழில்நுட்பமும் தொழில்நுட்ப பரிமாற்றமும் ஏற்படும். இந்திய அறிவியல் வல்லுநர்கள் மற்றும் ஆய்வு நிலையங்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். உள்நாட்டிலும். கடல் ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட உதவியாக இருக்கும்.

***