பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையே சுற்றுலாத் துறையில் கூட்டுறவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தனது பின்னேற்பு ஒப்புதலை அளித்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.07.2016 அன்று கையெழுத்தானது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள்:
அ) சுற்றுலாத் துறையில் இருநாட்டு கூட்டுறவினை விரிவாக்குதல்
ஆ) சுற்றுலாத் துறை சம்பந்தமான தகவல் மற்றும் புள்ளிவிவரத்தை பரிமாறுதல்
இ) ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா இயக்குபவர்கள் உள்ளிட்ட சுற்றுலாத் துறை பங்கேற்பாளர்களை ஊக்குவித்தல்
ஈ) மனிதவள மேம்பாட்டுத் துறை கூட்டுறவுக்கான திட்டங்களை பரிமாற்றி கொள்ளுதலை துவங்குதல்
உ) சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறையில் முதலீடு செய்தல்
ஊ) இருவழி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வண்ணம் இருநாட்டு சுற்றுலா இயக்குபவர்கள்/ஊடகம்/கருத்தாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையை ஊக்குவித்தல்.
எ) மேம்படுத்துதல், கல்வி, விற்பனை, தளங்கள் வளர்ச்சி மற்றும் மேலாண்மை குறித்த அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல்
ஏ) ஒருவர் மற்றவர் நாட்டில் நடைபெறும் சுற்றுலா சந்தைகள்/கண்காட்சிகளில் பங்கு பெறுதல்
ஐ) பாதுகாப்பான, கவுரவமான மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவித்தல்
வரலாறு:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா பரஸ்பரம் சுமூகமான மற்றும் நட்புணர்வான உறவை கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்கா இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு ஆதாரச் சந்தையாக மாறிவருகிறது. (2015ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவிலிருந்து 51922 சுற்றுலா பயணிகளை இந்தியா வரவேற்றுள்ளது). இந்தியா, மின்னணு சுற்றுலா விசா (இ.டி.வி) வசதியை தென்னாப்பிரிக்க மக்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதால், இரு நாடுகளும் சுற்றுலாத் துறையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வளர்ந்து வரும் சந்தையில், இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதாரமாக விளங்கும்.