பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே நீதித்துறை கூட்டுறவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் நீதித்துறைகள் இடையேயான பரஸ்பர கூட்டுறவை வளர்த்தல், ஊக்குவித்தல் மற்றும் வலுப்படுத்தலை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் உள்ள நீதிபதிகள் மற்றும் அலுவலர்கள் இடையேயான வருகைகள், பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் பரஸ்பர கலந்துரையாடல்களை ஊக்குவிக்க வாய்ப்பளிக்கிறது. மேலும் இந்த ஒப்பந்தம், சட்டம் மற்றும் நீதித் துறையில் தற்போதைய வளர்ச்சிகள் குறித்த தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கும் ஊக்கமளிக்கும். இந்த ஒப்பந்தம் மேலும், இத்துறையில் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவை பரிமாறிக்கொள்ள உதவும்.