Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே கடல்சார் மற்றும் மரபு வழிதடத்தில் பயணிகள் சொகுசு கப்பல் சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இருநாடுகளுக்கிடையே மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நிரந்தர நீர்வழி போக்குவரத்தை துவங்குவதற்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான கடல்சார் மற்றும் மரபு வழிதடத்தில் பயணிகள் சொகுசு கப்பல் சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை செயல்படுத்துவதன் மூலம், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான இரு நாடுகளுக்கிடையே மக்களுடன் மக்களுக்கான தொடர்பு மற்றும் கூட்டுறவையும் அதிகரிக்கச் செய்யும். மேலும் இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் வங்காளதேச நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.