Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனித்துவம், சமூக, பொருளாதார நீதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியலமைப்பு நிர்ணய சபையின் தனித்துவத்தையும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனது பொதுவாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளதையும் எடுத்துரைத்தும் விதமாக தாம் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்தார்.

அக்கட்டுரையில், சமூக, பொருளாதார நீதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், தாம் எழுதிய கட்டுரையில், அரசியலமைப்புச் சட்டம், அரசியலமைப்பு நிர்ணய சபையின் தனித்துவம் குறித்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனது பயணத்தின் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், சமூக, பொருளாதார நீதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இக்கட்டுரையில் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், நாட்டை 5 தசாப்தங்களாக ஆட்சி செய்தவர்களால் அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும், ஒரு கட்சி எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்து தடையை ஏற்படுத்தும் கட்சியாக எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதாகப் பிரதமர் அந்தப் பதிவில் தெரிவித்தார்.

(Release ID: 2341792)

***

SS/PD/PS