பி.எம்.இந்தியா
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கு முதலீட்டு தொகையாக ரூ.800 கோடிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வங்கியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இது வழங்கப்பட்டுள்ளது.
பின்னணி:
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி, 1982ம் ஆண்டு இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கிச் சட்டம்-1981ன்படி சட்டப்படியாக ஏற்படுத்தப்பட்ட வங்கியாகும். ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஏற்றுமதி இறக்குமதிக்கு நிதி உதவி செய்யும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் முதன்மை நிதி நிறுவனமாக செயல்படவும் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் சர்வதேச வாணிபம் மற்றும் அது தொடர்பான விவகாரங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது.