பி.எம்.இந்தியா
இந்திய பங்குச்சந்தை வாரியத்துக்கும் ஐரோப்பிய பங்குகள் மற்றும் சந்தைகள் ஆணையத்திற்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஐரோப்பிய பங்குகள் மற்றும் சந்தைகள் ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மத்திய எதிர் தரப்பினர் அமைப்பினை அங்கீகரித்து பரிவர்த்தனை சேவைகளை பரிவர்த்தனை உறுப்பினர்களுக்கு அல்லது ஐரோப்பிய யூனியனில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக இடங்களுக்கு வழங்க முன்நிபந்தனையாக ஒத்துழைப்பு ஏற்பாடுகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட மத்திய எதிர் தரப்பினர் அமைப்புக்கு அங்கீகார நிபந்தனைகள் பொருந்துகின்றனவா என்பதை கண்காணிக்கும் வழிவகையையும் இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய பங்குகள் சந்தைகள் ஆணையத்திற்கு வழங்கும்.