பி.எம்.இந்தியா
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் ஆதரவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டி துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாளரிவன் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
கேல் மகாகும்ப், கேலோ இந்தியா போன்ற முன்முயற்சிகள் மூலம் இளம் திறமையாளர்களை வளர்ப்பது முதல் உயர்தரப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, நவீன வசதிகள், முழுமையான ஆதரவு ஆகியவற்றை அளிப்பது வரை எந்த அளவு பிரதமர் ஆதரவு விரிவடைந்துள்ளது என்பது குறித்து இளவேனில் வாளரிவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“இந்திய விளையாட்டுத் துறையில் வீரர்களுக்கு அளிக்கப்படும் ஆதரவில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இளவேனில் வாளரிவன் எழுதியுள்ளார். கேல் மகாகும்ப், கேலோ இந்தியா ஆகியவற்றின் மூலம் இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதன் முதல் உயர்தரத்தில் வீரர்களுக்கு பயிற்சி, வசதி, ஆதரவு ஆகியவற்றை அளிப்பது வரை பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆதரவு எந்த அளவு விரிவடைந்துள்ளது என்று அவர் விவரித்துள்ளார்.
அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று”.
***
(Release ID: 2319988)
TV/IR/SM/SH
Indian sport has seen a significant shift in the way athletes are supported, writes Elavenil Valarivan. She reflects on how PM @narendramodi's support has extended from encouraging young talent through Khel Mahakumbh and Khelo India to providing athletes with training, facilities and support at the highest level. A must-read!
— PMO India (@PMOIndia) October 7, 2026