பி.எம்.இந்தியா
இந்திய ராணுவத்தினரின் மீது நாடு வைத்துள்ள மதிப்பு, மரியாதை ஆகியவை பண்டிகையை ஒட்டி, பிரதமர் திரு. நரேந்திரம மோடி தலைமையில், புதிய பிரசார வடிவில் வெளிப்படும்.
தீபாவளியைக் கொண்டாடும் நேரத்தில், பாசத்துக்குரிய உறவினர்களை விட்டு வெகு தொலைவில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஊட்டும் வகையில் “ராணுவ வீரர்களுக்கான செய்தி” என்ற பிரசாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாய்ப்பை வழங்கும்.
ஆயுதம் தாங்கிய படைவீரர்களுக்கு கடிதங்கள், செய்திகளை அனுப்ப வலியுறுத்தி மக்களை அழைக்கும் விதத்திலான இந்தப் புனிதமான பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தீரம் மிக்க படைவீரர்களுக்கு செய்திகளையும் தீபாவளி வாழ்த்துகளையும் அனுப்புவதைத் தொடங்கும் நோக்கில், பிரதமர் சமூக வலைத்தளங்கள், சிறப்பு வீடியோ பதிவு மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வீடியோ படம் வெளியான குறுகிய நேரத்தில் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரு. நரேந்திர மோடியின் MyGov.in என்ற இணையதளத்தின் மூலமும் அகில இந்திய வானொலி மூலமும் மக்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பலாம். அதைப் போல் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தொலைக்காட்சியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“நரேந்திர மோடி ஆப்” என்ற செயலி மூலமாகவும் மக்கள் கைப்பட எழுதிய வாழ்த்துகளையும் வாழ்த்துச் செய்திகளையும் படைவீரர்களுக்கு அனுப்பும் சிறப்பு வசதி தொடங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் அதிகமாகக் கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ள “சந்தேஷ் 2 போர் வீர்ர்கள்” (#Sandesh2Soldiers) என்ற பிரசார இயக்கம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போபாலில் இம்மாத தொடக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நமது ராணுவத்தினரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் குறிப்பிட்டுப் பேசினார். ராணுவத்தினரைச் சந்திக்கும்போது, அவர்களை உற்சாகமாக வாழ்த்தும்படி பிரதமர் மக்களை அழைத்தது சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது.
திரு. நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், இரண்டு ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகையை ஆயுதப் படையினருடன் கொண்டாடி வந்தார்.
This Diwali, let us remember our courageous armed forces who constantly protect our Nation. Jai Hind. pic.twitter.com/uXf6Or3xsQ
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
I sent my #Sandesh2Soldiers. You could also do the same. Your wishes will certainly make our forces very happy. https://t.co/TYuxNNJfIf
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
मैंने अपना #Sandesh2Soldiers भेज दिया है। आप भी जरूर भेजिए। https://t.co/TYuxNNJfIf pic.twitter.com/aHzHfeQGkf
— Narendra Modi (@narendramodi) October 23, 2016
सवा सौ करोड़ देशवासी जब सैनिकों के साथ खड़े होते हैं तो उनकी शक्ति सवा सौ करोड़ गुना बढ़ जाती है।
— Narendra Modi (@narendramodi) October 23, 2016