பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, , இலங்கை மத்திய வங்கியோடு செய்து கொள்ளப்பட்ட 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய மாற்றுக்கான மதிப்பு தேதியை 8 மார்ச் 2016 வரை நீட்டிக்க ஒப்புதல். இலங்கை மத்திய வங்கி, 3 மார்ச் 2016 அன்று அத்தொகையை மத்திய ரிசர்வ் வங்கிக்கு திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.
இந்த முடிவு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, இலங்கைக்கு ஒரு தற்காலிக நிவாரணத்தை அளிக்கும்.
மேலும், ஐ.எம்.எப். நிறுவனத்திடமிருந்து இலங்கை கடன் பெறும் வரையிலோ, அல்லது 3 மாதங்களோ, எது முன்னதாக வருகிறதோ, அது வரை மேலும் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாணய மாற்று செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்புதல் இலங்கை தனது பொருளாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள உதவும். 2015 முதல் அமெரிக்க வட்டி விகித உயர்வின் காரணமாக இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பு கடுமையாக குறைந்து வருகிறது. சார்க் அமைப்பு மற்றும் தெற்காசியாவில் முக்கியமான உறவு நாடாக இருக்கும் இலங்கையோடு இந்தியாவின் நட்புணர்வை இது அதிகரிக்கும்.