பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள் விவகாரத்தில், ஒத்துழைப்புக்காக இந்தியா, ஆர்மேனியா இடையே ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த ஏப்ரல் மாதத்தில் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். அதன்பிறகு, ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று, ஒப்பந்தம் காலாவதியாவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு முன்பு, ஏதாவது ஒரு நாடு தெரிவிக்காவிட்டால், இந்த ஒப்பந்தம் தானாகவே மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தை எந்தவொரு நாடும், 6 மாதங்களுக்கு முன்பாக, எழுத்துமூலம் தகவல் தெரிவித்து ரத்துசெய்ய முடியும்.
இளைஞர்கள் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், ஊக்குவிப்பதுமே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம். இதற்காக இரு நாடுகளும் நிகழ்ச்சிகளை நடத்தி பங்கேற்கும். தகவல் மற்றும் புலமை பரிமாறிக் கொள்ளப்படும். இளைஞர்கள் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்.
இளைஞர்கள் விவகாரத்தில் ஒத்துழைப்புக்கான பகுதிகளில், இளைஞர்கள் பரிமாற்றம், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதில் இளைஞர்களுக்கான அரசு அதிகாரிகளின் பொறுப்பாளர்கள் ஆகியவை அடங்கும். இரு நாடுகளிலும் இளைஞர்கள் விவகாரங்கள் தொடர்பாக நடைபெறும் சர்வதேச கருத்தரங்குகள், பயிலரங்கம் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கவும் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. மேலும், அச்சு தகவல்கள், திரைப்படங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளலாம். இரண்டு நாடுகளிலும் நடைபெறும் இளைஞர் முகாம்கள், இளைஞர் திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, இளைஞர்கள் விவகாரம் தொடர்பான ஆய்வு மற்றும் பிற விவகாரங்களிலும் ஒத்துழைப்பு ஆகியவை ஏற்படும்.
*****