Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு


s2015021962470 [ PM India 220KB ]

s2015021962471 [ PM India 229KB ]

இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு மோஷே யாலோன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். நம் நாட்டில் நடக்கும் “ஏரோ இந்தியா 2015” மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அவர் மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்தார்.

அப்போது, பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுகுழுவின்போது இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹுவுடனான தனது சந்திப்பை நினைவு கூர்ந்தார். பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள ஒத்துழைப்பு திருப்தி தருவதாக தெரிவித்தார்.