பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை உணவுப்பதப்படுத்துதல் துறையில் இந்தியா- ஜப்பான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பலன்கள்:
உணவுப் பதப்படுத்துதல் துறையில் இருநாடுகளும் பயனடையும் வகையில், இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இருநாடுகளிலும் கடைபிடிக்கப்படும் சிறந்த உணவுப் பதப்படுத்துதல் முறைகள் ஊக்கப்படுத்தப்பட்டு, சந்தை அணுகுமுறையையும் மேம்படுத்தும். இதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களும் செயல்முறைகளும் இருநாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
***