Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து


பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள அவரது திறமை மற்றும் நிலைத்தன்மையை திரு மோடி பாராட்டியுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 

“ஆடவர் உயரம் தாண்டுதல் டி 63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள். பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று பதிப்புகளில் அவர் பதக்கங்களை வென்றிருப்பது பாராட்டத்தக்கது. அவரது திறமை, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாடு அபாரமானது. “

 

***

(Release ID: 2051583)

PKV/RR/KR