பி.எம்.இந்தியா
உயர்கல்வியில் இந்தியா – ஜெர்மனி இடையேயான ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை கொண்டுவருவதற்கு இந்தியாவும் ஜெர்மனியும் மேற்கொண்ட கூட்டு அறிவிப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கூட்டு அறிவிப்பு நோக்கத்தில் கையெழுத்திடுவதன் மூலம் “உயர்கல்வியில் இந்தியா – ஜெர்மனி இடையேயான ஒப்பந்தம்” என்ற தலைப்பில் இருந்து வினை முறைத் திறம் என்ற வார்த்தை நீக்கப்படும். இத்திட்டத்திற்கான நிதி வழங்கும் காலம் 2015-19 லிருந்து 2016-20 ஆக மாற்றப்படும். (ஜூலை 1, 2016 முதல் ஜூன் 30, 2020)
கூட்டு அறிவிப்பு நோக்கத்தில் இரு நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் புதிய முயற்சிகளை மேம்படுத்த உதவும். ஆசிரியர்களின் வளர்ச்சிக்கு பலன் அளிப்பதுடன் இந்தியாவிற்கு சவாலாக கண்டறிப்பட்டுள்ள முக்கியத் துறைகளில் மேம்பட்ட ஆய்வை ஊக்குவிக்கும்.