Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உயர்கல்வி நிறுவனங்களுக்கான உயர்கல்வி நிதியீட்டுக்கான முகமையை நிறுவ மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உயர்கல்வி நிதியீட்டு முகமையை அமைக்க இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மனிதவளத்துறை அமைச்சரவை மற்றும் அடையாளம் காணப்பட்ட மேம்படுத்துனர் இரண்டின் கூட்டு முயற்சியில் இந்த முகமை சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் வளர்ச்சி பெறும். இதில் அரசின் பங்களிப்பு சுமார் 1,000 கோடி ரூபாயாகும்.

பொதுத்துறை வங்கிகள் அல்லது அரசு சார் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் சிறப்பு நோக்க நிறுவனமாக இந்த முகமையகம் உருவாக்கப்படும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்களில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு, பரிசோதனைக் கூடங்கள் போன்றவற்றை உருவாக்கத் தேவையான நிதியில் சுமார் 20,000 கோடி ரூபாயை அதிகரிக்க இந்த முகமையகம் உதவும்.

பொதுத்துறை மற்றும் தனியார்துறையில் உள்ள சமூகச் செயல்பாட்டுக்கான நிதியையும் இந்த முகமையகத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் இந்த நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை சலுகைகளின் அடிப்படையில் மேம்படுத்த முடியும்.

சுமார் பத்து வருட கால கடன் அடிப்படையில் கட்டமைப்பு மற்றும் பரிசோதனைக்கூட அமைப்புகளுக்குத் தேவையான நிதியை இந்த முகமையகம் அளிக்கும். கல்விக்கட்டணம், ஆராய்ச்சியில் கிடைத்த பணம் வாயிலாகக் கிடைக்கும் நிதியை இந்தக் கடனின் முதலை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். வட்டிக்கான பணத்தை, தொடர் திட்ட உதவியின் வாயிலாகச் செலுத்த அரசாங்கம் வழி செய்யும்.

இந்த முகமையகத்தில், மத்தியஅரசு நிதி உதவி பெறும் எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் இணையலாம். இதில் உறுப்பினராக இடம்பெற, கல்வி நிறுவனங்கள், வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பத்து ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். பங்குச் சந்தையில் இருந்து தொடர்ந்து பணம் வர இந்தத் தொகை உதவும். அவர்கள் செலுத்தும் பணத்துக்கு தக்க குறிப்பிட்ட அளவு கடன் உதவி பெற முகமையம் உதவி செய்யும்.