Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகத் திறன் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

உலகத் திறன் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (09.10.2026) தமது இல்லத்தில், ஷாங்காய் 2026 உலகத் திறன் போட்டியில் பங்கேற்ற, இந்திய அணியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின் போது, பங்கேற்பாளர்கள் போட்டியில் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். உலக அரங்கில் தங்களது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். சர்வதேசப் போட்டியின் போது புதிய கருவிகள், மென்பொருள்கள், தொழில்நுட்ப அமைப்புகள், பணி நடைமுறைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது குறித்து பங்கேற்பாளர்கள் விவரித்தனர்.  

உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பங்கேற்பாளர்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். திறன் மேம்பாட்டின் தூதுவர்களாக மாறுமாறு அவர் அவர்களை வலியுறுத்தினார். கல்விப் பட்டங்களைப் போலவே நடைமுறைத் திறன்களும் முக்கியமானவை என்று அவர் கூறினார்.

 

சிறப்புத் திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், இளைஞர்கள் தொடர்ந்து புதிய திறன்களைப் பெற்று, தங்களின் தற்போதைய ஆற்றல்களை மேம்படுத்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

திறன் மேம்பாட்டிற்காக ஒரு தனி அமைச்சகத்தை நிறுவியதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை பிரதமர் சுட்டிக் காட்டியதோடு, திறன் பயிற்சி நிறுவனங்களின் முக்கியத்துவம் ஐஐடி, ஐஐஎம்-களுக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல என்றும் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில், திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, அரசின் உயர்நிலை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வேர்ல்ட் ஸ்கில்ஸ் எனப்படும் உலகத் திறன் போட்டி, உலகின் முன்னணி சர்வதேச திறன் போட்டியாகும். 48-வது வேர்ல்ட் ஸ்கில்ஸ் போட்டி, ஷாங்காயில் 2026 செப்டம்பர் 22 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் இந்திய அணி 10-வது இடத்தைப் பிடித்ததுடன், 6 வெள்ளிப் பதக்கங்களையும் 20 சிறப்புப் பதக்கங்களையும் வென்றது. இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான 70 போட்டியாளர்கள் 63 திறன்களில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321367&reg=3&lang=1  

***

SS/PLM/SH