Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக கலாச்சார விழாவின் துவக்க நிகழ்வில் பிரதமர் உரை

உலக கலாச்சார விழாவின் துவக்க நிகழ்வில் பிரதமர் உரை

உலக கலாச்சார விழாவின் துவக்க நிகழ்வில் பிரதமர் உரை


புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக கலாச்சார விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மனித குலத்திற்கு 35 ஆண்டுகளாக ஆற்றி வரும் சேவையை நினைவு கூறும் வகையில் வாழும் கலை அறக்கட்டளை இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் உலக கலாச்சார விழாவில் பங்கு கொள்வதற்காக புதுதில்லியில் வந்து குவிந்திருந்த மக்களை வரவேற்ற பிரதமர், உலகத்தின் 150க்கும் மேலான நாடுகளில் வாழும் கலை அறக்கட்டளை மகத்தான சேவை செய்து வருவதற்காக அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பிரதமர் பாராட்டினார்.

மங்கோலியாவில் வாழும் கலை அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த பிரதமர், உலகத்திற்கு அளிக்க இந்தியாவிடம் ஏராளமாக இருக்கிறது என்றும், எனினு அதைச் செய்வதற்கு முன்னால் இந்திய கலாச்சாரத்தின் தனித்தன்மையைப் பற்றியும், அதன் விரிவான தன்மையையும் பாராட்டுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். வாழும் கலையின் மூலமாக, உலகம் இந்தியாவை பாராட்ட முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

‘வாழும் கலை’ பற்றி மிக விரிவாகப் பேசிய பிரதமர், எதிர்ப்புகளுக்கு இடையிலும் ஒருவர் தனது இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியைப் பெற ‘வாழும் கலை’ மிக அவசியமான தேவை என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் உரையாற்றுவதற்கு முன்பாக, உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான பிரமுகர்கள் இந்த விழாவில் பேசினர். ஏராளமானோர் பங்கேற்ற ஒரு கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற்றது.