Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக காண்டாமிருக தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தி


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (22.09.2026) உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு, கம்பீரமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் குறித்து சிறப்பாக குறிப்பிட்டுள்ளதோடு, அதன் பாதுகாப்பில் முன்னணியில் இருப்பவர்கள் அனைவரையும் பாராட்டியுள்ளார். உலகின் காண்டாமிருக எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் இப்போது அசாமில் உள்ளது என்றும், காண்டாமிருக வேட்டையை முடிவுக்குக் கொண்டுவர கசிரங்கா பூங்கா மேற்கொண்ட முயற்சிகள் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் இருந்து வெளியேறிய காண்டாமிருகங்கள் திரும்பிவிட்டன எனவும் அவை நன்கு பாதுகாக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தின் துத்வாவில் காண்டாமிருகங்கள் வெற்றிகரமாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இது, காண்டாமிருகங்கள் வாழும் மாநிலங்களில் விலங்குப் பாதுகாப்பு, செயல்திறன் மிக்க வனவிலங்கு மேலாண்மை ஆகியவற்றில் மக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டில் வன உயிரினப் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்ல, காண்டாமிருகங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் அவற்றின் பாதுகாப்பு, வாழ்விட மேலாண்மை, மரபணு மேம்பாடு, காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றுக்காக நிதி உதவியையும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்க ‘காண்டாமிருகங்கள் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“உலக காண்டாமிருக தினத்தன்று, கம்பீரமான பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தைக் கொண்டாடுவதோடு, அதன் பாதுகாப்பில் முன்னணியில் உள்ள அனைவரையும் நாம் பாராட்டுகிறேன்.

 

தற்போது உலகின் காண்டாமிருக எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80% அசாமில் உள்ளது. மேலும், காண்டாமிருக வேட்டையை முடிவுக்குக் கொண்டுவர கசிரங்கா பூங்கா மேற்கொண்ட முயற்சிகள் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன.

 

ஒருபுறம், பீகார், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் காண்டாமிருகங்கள் திரும்பிவிட்டன. அவை நன்கு பாதுகாக்கப்படுகின்றன. மறுபுறம், துத்வாவில் (உத்தரப் பிரதேசம்) காண்டாமிருகங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியதன் வெற்றி ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இது, காண்டாமிருகங்கள் வாழும் மாநிலங்களில் விலங்குப் பாதுகாப்பு, செயல்திறன் மிக்க வனவிலங்கு மேலாண்மை ஆகியவற்றில் நமது மக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

 

நாட்டில் உயிரினப் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், காண்டாமிருகங்கள் வாழும் மாநிலங்களில் அவற்றின் பாதுகாப்பு, வாழ்விட மேலாண்மை, மரபணு மேம்பாடு, காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றுக்காக நிதி உதவியையும், தொழில்நுட்ப ஆதரவையும் வழங்க ‘காண்டாமிருகங்கள் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது என்பதைப் பகிர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

 

(Release ID : 2313522)

****

TV/PLM/SH