Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுதில்லியில் நாளை நடைபெறவுள்ள கொண்டாட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ராஜ்பத் புல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் பிரதமர் பார்வையிடுவார்.

இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தின மையக்கருத்து பிளாஸ்டிக் மாசினை ஒழிப்போம் என்பதாகும். சுற்றுச்சூழல் தினத்தின் 43-ஆவது சர்வதேச நிகழ்ச்சியை இந்தியா நடத்துகிறது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பல்வேறு தொழில் அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். பிரதமர் தமது 44-ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை இந்தியா நடத்துவது, பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களை சமாளிப்பதில் இந்தியா தலையாய நாடாக உருவெடுத்து வருவதற்கு கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டிருந்தார்.

—-