பி.எம்.இந்தியா
2026 உலக இளையோர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (26.07.2026) பாராட்டியுள்ளார். தங்கப் பதக்கம் வென்று, உலக இளையோர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையை, அனஹத் சிங் பெற்றிருப்பதில் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சாதனை, இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“2026 உலக இளையோர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
தங்கப் பதக்கம் வென்று, உலக இளையோர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அனஹத் சிங்கை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். அவரது இந்தச் சாதனை, இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும்.”
***
(Release ID: 2289594)
TV/PLM/RJ
A historic feat at the 2026 World Junior Squash Championship.
— Narendra Modi (@narendramodi) July 26, 2026
Proud of Anahat Singh for winning the Gold Medal and becoming the first Indian squash player ever to win the World Junior Championship title. This accomplishment will further popularise squash among the youth.… pic.twitter.com/NtvHnrKNDQ