Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியா-பெலாரஸ் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியா-பெலாரஸ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெலாரஸ் அதிபர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, செப்டம்பர் 12, 2017-ல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை, இந்தியா-பெலாரஸ் இடையேயான இருதரப்பு நல்லுறவை ஊக்குவிக்கும். மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இருதரப்புக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை செய்கிறது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், இந்தியாவில் இரு நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் இடங்களை கண்டுபிடித்தல், எரிவாயு எடுத்தல், திறனை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப பரிமாற்றம், எண்ணெய் வெட்டியெடுப்பதை அதிகப்படுத்துதல், உச்சகட்ட உற்பத்திக்கான இடங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, கையெழுத்தான தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்.