பி.எம்.இந்தியா
புதுதில்லி, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் ஜூன் 29ம் தேதி வருகை தருகிறார்.
அங்கு மூப்பியல் தேசிய மையத்துக்கான அடிக்கல்லை அவர் நாட்டுகிறார். இது வயது முதிர்ந்தோருக்கு நேரும் அனைத்துவிதமான உடல்உபாதைகளுக்கும் தீர்வு வழங்கக் கூடிய பல் நோக்கு சிறப்பு மருத்துவ மையமாக திகழும். இது 200 படுக்கைகள் கொண்டதாக இருக்கும்.
அதே தினம் சஃப்தர் ஜங் மருத்துவமனையில் 555 படுக்கைகளுடன் அதி நவீன சிறப்பு மருத்துவப் பிரிவையும் (Super Speciality Block) 500 படுக்கைகள் கொண்ட புதிய அவசர சிகிச்சைப் பிரிவையும் (Emergency Block) பிரதமர் திறந்து வைக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனையில் 300 படுக்கைகள் கொண்ட ஓய்வில்லத்தையும் (PowerGrid Vishram Sadan) பிரதமர் திறந்து வைக்கிறார். இவற்றுடன் அன்ஸாரி நகர், எய்ம்ஸ் மற்றும் அவசர சிகிச்சை மையத்துக்கும் இடையில் சுரங்கவழி வாகனப் பாதையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
***
Tomorrow PM @narendramodi will visit AIIMS, where he will lay the Foundation Stone of the National Centre for Aging. This will provide the older population with multi-speciality healthcare. It will have 200 general ward beds.
— PMO India (@PMOIndia) June 28, 2018
He will also inaugurate the 555-bed Super Speciality Block in Safdarjung Hospital. He will dedicate the 500-bed New Emergency Block in Safdarjung Hospital, 300-bed PowerGrid Vishram Sadan in AIIMS and the Connection Motorable Tunnel between AIIMS, Ansari Nagar and Trauma Centre.
— PMO India (@PMOIndia) June 28, 2018