Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஏமன் நாட்டிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவும் குடிமக்கள், ராணுவ வீரர்களுக்கு பிரதமர் வீர வணக்கம்


ஏமன் நாட்டிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவும் குடிமக்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் மற்ற அமைப்புகளுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார்.

“ஏமன் நாட்டிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவும் குடிமக்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் மற்ற அமைப்புகளுக்கும் எனது வீர வணக்கம். உங்களது முயற்சிகளை தொடருங்கள்! வெளியுறவு துறை அமைச்சகம், கடற்படை, விமானப்படை, ஏர் இந்தியா, கப்பல் போக்குவரத்து, ரயில்வே மற்றும் மாநில அரசுகள் இடையே உள்ள ஒத்துழைப்பு மீட்பு பணிக்கும் மிகவும் உதவியாக உள்ளது. திருமதி. சுஷ்மா சுவராஜ் மற்றும் ராணுவ தளபதி வி.கே.சிங் (பல நாட்களாக சம்பவ இடத்தில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர்) மீட்புக்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இந்திய அரசு ஏமனில் மற்ற நாட்டு குடிமக்களையும் மீட்டுள்ளனர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏமனில் நாம் எடுத்துள்ள முயற்சிகள் துயரத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு நமது மக்கள் முழுமனதோடு உதவ தயாராக இருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கின்றன.”, என்று பிரதமர் கூறியுள்ளார்.