Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐஓஆர்ஏ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பிரதிநிதிகள் குழுத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு


இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்க (ஐஓஆர்ஏ) நாடுகளின் அமைச்சர்கள் குழுவின் 25-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுதில்லி வந்துள்ள ஐஓஆர்ஏ-ன் 23 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைசர்கள், பிரதிநிதிகள் குழுத் தலைவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

இந்தியப் பெருங்கடலால் பேணி பாதுகாக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு கால பழமையான  வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சாரப் பிணைப்புகளை எடுத்துரைத்த பிரதமர், ஐஓஆர்ஏ-ன் தலைவர் என்ற முறையில் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, பகிரப்பட்ட செழிப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, ‘மகாசாகர்‘ (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம்) என்ற தனது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல இந்தியா ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டதாவது:

“புதுதில்லியில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்க (ஐஓஆர்ஏ) நாடுகளின் 25-வது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் 23 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பிரதிநிதிக் குழுத் தலைவர்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியப் பெருங்கடல், பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மக்களை இணைத்து வந்துள்ளது. ஐஓஆர்ஏ-ன் தலைவராக, மகாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம்)  என்ற தனது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, செழிப்பை வலுப்படுத்தவும் அனைத்துப் பங்காளர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றுவதை இந்தியா ஆவலுடன் எதிர்நோக்குகிறது.

@IORAofficial”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342790&reg=3&lang=1

****

SK/BR/SH