Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய தேசிய நாடுகள் தினம் – பிரதமர் வாழ்த்து


ஐக்கிய தேசிய நாடுகள் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.

“ஐக்கிய தேசிய நாடுகள் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மனித சேவையில் 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, உலகை அமைதியான இடமாக மாற்றும் லட்சியத்திற்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பல்வேறு முயற்சிகளில் முன்னணியில் இருப்பதுடன் அவர்களின் திட்டங்களுக்கு சிறந்த ஆதரவை அளிப்பதில் இந்தியா தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய நாடுகள் தினத்தன்று உலகெங்கும் உள்ள முக்கியமான கட்டிடங்கள் நீல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அதேபோல இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் அலங்கரிக்கப்படும்.

காந்தி அவர்களால் வகுக்கப்பட்ட பாதைகளும் எண்ணங்களும் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது. அவை ஐக்கிய நாடுகள் கொள்கைகளுடனும் லட்சியத்துடனும் பொருந்துகிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****