Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐதராபாத்தில் சிர்டாப் மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி நிலையம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் மையத்தில் (NIRD&PR) ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையத்தை (சிர்டாப்) அமைப்பதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்துக்கும் மற்றும் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித் திட்டங்களில் சிறப்பு அனுபவம் பெற்ற நிறுவனங்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி நேரடி அறிவைப் பெறுவதன் சாதக நிலையை NIRD&PR-க்கு NIRD&PR வளாகத்தில் உள்ள சிர்டாப் மையம் அளிக்கும். அது NIRD&PR-க்கு செயல்பாட்டு அறிவுக் களஞ்சியத்தை உருவாக்க உதவியாக இருக்கும். CIRDAP உறுப்பு நாடுகளில் (CMC-க்கள்) உள்ள அமைச்சகங்கள் / நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் தனது அந்தஸ்தை NIRD&PR – உயர்த்திக் கொள்ளவும் இந்த மையம் உதவும். CMC-க்களின் சிறந்த நடைமுறைகளை பரிமாற்ற அடிப்படையில் சென்று பார்ப்பதன் மூலம் NIRD&PR பயிற்சியாளர்களும் அமைச்சக அதிகாரிகளும் பயன் பெறுவார்கள். சி.எம்.சி உறுப்பு நாடுகளுக்குள் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி, குறிப்பாக வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல் செய்வதில் கவனம் செலுத்துவது இந்த மையத்தின் பணிக்கான நோக்கமாக இருக்கும்.

பின்னணி

ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (FAO) முன்முயற்சியால், பல்வேறு இதர ஐ.நா. அமைப்புகள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் 1979ல் உருவாக்கப்பட்ட சிர்டாப் என்பது பிராந்திய அளவிலான அரசுகளிடையே மற்றும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் முக்கியமான நாடுகளில் ஒன்று இந்தியா. அதன் தலைமையகம் வங்கதேசத்தில் டாக்காவில் உள்ளது. பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் ஆராய்ச்சி செயல்பாடு, பயிற்சி, தகவல் பரவச் செய்தல் ஆகியவற்றின் மூலம் தன் உறுப்பு நாடுகளில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவை சிர்டாப்பின் நோக்கமாகும்.

சிர்டாப்பிற்கு இந்தோனேசியாவில் ஜகார்த்தா நகரில் ஒரு துணை – பிராந்திய அலுவலகம் உள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் (SOCSEA) இந்த துணை பிராந்திய அலுவலகம் 1997ல் இந்தோனேசியாவில் ஜகார்த்தா நகரில் அமைக்கப்பட்டது. சிர்டாப்பின் உறுப்பினர்களுக்கு உதவுவது, அமைப்பையும் ஆதார வளங்களையும் விரிவுபடுத்துவது மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்குப் பொருத்தமான முன்னோடித் திட்டங்களுக்கான பயிற்சி ஆராய்ச்சிகள் நடத்துவது ஆகியவை இதன் நோக்கமாகும். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 46 நாடுகள் உள்ளன. எனவே சிர்டாப் விரிவுபடுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு சிர்டாப் மையங்களின் உதவி கிடைக்கும்.

***