பி.எம்.இந்தியா
மாநிலங்களவையில் பதவிக்காலம் நிறைவடையும் உறுப்பினர்கள் அனைவரின் பணிகளுக்கும் பாராட்டுத் தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திரமோடி, அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பேசிய பிரதமர், அவையிலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்கள், சமுதாயப் பணியில் மேலும் சிறப்பாகப் பாடுபடுவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். ஓய்வு பெறும் உறுப்பினர்கள் அனைவரும் தனித்துவமான முக்கியத்துவம் பெற்றவர்கள் என்றும், அவர்களுக்கு உரிய வழிமுறையில் பங்களிப்பைத் தந்திருப்பதாகவும் கூறினார். உறுப்பினர்கள் இயன்றவரை நாட்டின் வளமான எதிர்காலத்திற்காகச் சிறப்பான முறையில் பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்தார். அவர்களது பங்களிப்பை தேசம் ஒருபோதும் மறக்காது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மூத்த உறுப்பினர்களைக் கொண்ட மேல்சபை தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் கொள்கைகளை வகுப்பதில் மாநிலங்களவை முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.
ஓய்வுபெறும் உறுப்பினர்கள் பலரது பெயரை குறிப்பிட்டு அவர்களது பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முத்தலாக் விவகாரம் தொடர்பான முடிவு எடுக்கப்படவுள்ள நிலையில், ஓய்வுபெறும் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் அங்கத்தினர்களாக இருக்க முடியாமல் போவது துரதிருஷ்டவசமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்காக நாடாளுமன்றத்தின் கதவுகளும், பிரதமர் அலுவலகமும் எப்போதும் திறந்திருக்கும் என்று உறுதியளித்த பிரதமர், தற்போதைய முக்கியப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை தொடர்ந்து பரிமாறிக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
We bid farewell to some of our MP colleagues in the Rajya Sabha. They have contributed significantly to Parliament and we have all gained from their experience and insight: PM @narendramodi in the Rajya Sabha
— PMO India (@PMOIndia) March 28, 2018
The Rajya Sabha is a distinguished House, with eminent members serving here. This House plays a vital role in our democracy: PM @narendramodi https://t.co/0Tbiv8imV6
— PMO India (@PMOIndia) March 28, 2018
We will always remember the distinguished work of Parasaran Ji. Who can forget the manner in which Professor Kurien has contributed to the Rajya Sabha: PM @narendramodi in the Rajya Sabha
— PMO India (@PMOIndia) March 28, 2018
We will always remember the distinguished work of Parasaran Ji. Who can forget the manner in which Professor Kurien has contributed to the Rajya Sabha: PM @narendramodi in the Rajya Sabha
— PMO India (@PMOIndia) March 28, 2018