Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கனடா நாடாளுமன்ற தேர்தல் ஜஸ்டின் ரூடோ வெற்றி – பிரதமர் வாழ்த்து


கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் திரு. ஜஸ்டின் ரூடோ வெற்றிப் பெற்றதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கு திரு. ஜஸ்டின் ரூடோவிற்கு எனது வாழ்த்துகள்.

கனடா நாட்டுடன் நாங்கள் கொண்டுள்ள உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஜனநாயகத் தன்மை என்ற வலுவான உறவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இதில் கனடாவில் வாழும் இந்திய மக்களில் ஒற்றுமையும் வலுசேர்க்கிறது.

கனாடாவிற்கு ஏப்ரல் 2015ல் நான் மேற்கொண்ட பயணத்தின் போது நான் உங்களைச் சந்தித்த சிறந்த நினைவுகள் பசுமையாக உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

•••••