Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மையத்தில் காணொளிக் காட்சி மூலமாக இராமாயண தரிசனம் கண்காட்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மையத்தில் காணொளிக் காட்சி மூலமாக இராமாயண தரிசனம் கண்காட்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்


கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மையத்தில் காணொளிக் காட்சி மூலமாக இராமாயண தரிசனம் கண்காட்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். 

 

பிரதமர் மோடி இராமாயண தரிசனம் கண்காட்சியை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மையத்தில் காணொளிக் காட்சி மூலமாக துவக்கி வைத்து  உரையாற்றினார். 

 

ஜனவரி 12 என்பது சாதாரண நாள் இல்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், விவேகானந்தரின் ஆற்றல்மிக்க சிந்தனைகள் பல மனங்களை தொடர்ந்து செழுமைபடுத்துவதாகவும் தெரிவித்தார்.  இந்தியா இளமையான நாடு என்றும்,  பொருளாதார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும்  இந்நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  இளைஞர்கள் இந்த தேசத்தைக் கட்டமைப்பதில் விவேகானந்தரின் சிந்தனைகள் பெரிதும் உதவும் என்றார். 

 

அய்யன் திருவள்ளுவருக்கும், ஏக்நாத் ராணடேவுக்கும் மரியாதை செலுத்திய பிரதமர், இளைஞர்கள் எக்காலத்திலும் கற்பதை நிறுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.