தமிழ்நாட்டின் கரூரில் இன்று நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாடு ஆதரவாக நிற்கிறது என்றும், தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதற்கு அரசு உறுதியளிக்கிறது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் கரூரில் அரசியல் கூட்டத்தின்போது நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”
—-
(Release ID: 2172305 )
SS/VK/SG
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.
— Narendra Modi (@narendramodi) September 27, 2025
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற…
— Narendra Modi (@narendramodi) September 27, 2025