பி.எம்.இந்தியா
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து சிறந்த பொது ஆளுமையாகத் திகழ்ந்தவராகவும் நினைவுகூரப்படும் கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, விளிம்பு நிலை மக்களின் நலன் ஆகியவற்றில் கே காமராஜரின் உறுதிமிக்க அர்ப்பணிப்பு பலதலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாக திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
“கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவரை நினைவுகூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து சிறந்த பொது ஆளுமையாக அவர் திகழ்ந்தார். கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, விளிம்பு நிலை மக்களின் நலன் ஆகியவற்றில் அவருடைய உறுதிமிக்க அர்ப்பணிப்பு தலைமுறையினருக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது.
***
(Release ID: 2284717)
SS/IR/KPG/KR
Remembering Thiru K. Kamaraj Ji on his birth anniversary. A stalwart of India’s freedom movement and an exceptional public figure, he dedicated his life to nation-building. His unwavering commitment to areas like education, inclusive development and the welfare of the…
— Narendra Modi (@narendramodi) July 15, 2026