Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் எஃப்57 ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற சோமன் ராணாவிற்கு பிரதமர் வாழ்த்து


கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சோமன் ராணாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த மகத்தான வெற்றியின் மூலம், இப்பிரிவில் இந்தியாவின் முதல் காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை சோமன் ராணா பெற்றுத் தந்துள்ளார் என்று பிரதமர் கூறியுள்ளார்.

போட்டி முழுவதும் அவர் செலுத்திய சிறந்த கவனத்தையும் அவரது அசைக்க முடியாத உறுதியையும் பிரதமர் பாராட்டியுள்ளார். மேலும் அவரது எதிர்கால முயற்சிகளுக்குப் பிரதமர் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“சோமன் ராணா வரலாறு படைத்துள்ளார்!

ஆடவர் குண்டு எறிதல் எஃப் 57 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். இந்த மகத்தான வெற்றியின் மூலம், இப்பிரிவில் இந்தியாவின் முதல் காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுத் தந்துள்ளார். போட்டி முழுவதும் அவரது சிறந்த கவனமும் அசைக்க முடியாத உறுதியும் தெளிவாகத் தெரிந்தன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.”

****

(Release ID: 2293180)

TV/PLM/RJ