Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற சர்வேஷ் குஷாரேவுக்குப் பிரதமர் வாழ்த்து


கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் உயரம் தாண்டுதலில்   வெள்ளிப் பதக்கம் வென்ற சர்வேஷ் குஷாரேவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சர்வேஷ் குஷாரேவின் மன உறுதி,சீரான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரதமர், அவரது இந்தச் சாதனை சிறப்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த சாதனையின் மூலம் இந்தியா பெருமிதம்  கொள்வதாகத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

காமன்வெல்த் போட்டியில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரேவுக்கு சிறப்பான வெள்ளிப் பதக்கம்! அவரது மன உறுதியும், சீரான செயல்பாடும் குறிப்பிடத்தக்கவை. இந்தச் சிறப்பான சாதனையைப் படைத்த அவருக்கு வாழ்த்துகள். அவரை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர் மேலும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

(Release ID: 2290314)

***

TV/SV/KR